feddral bank
BREAKING NEWS

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தப்படும்-பொன்.ராதாகிருஷ்ணன்

பதிவு செய்த நாள்: 05 Oct 2016 10:59 am

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது. இந்த பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி உமாபாரதி ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவோம்.

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதால் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இது குறித்து ஐகோர்ட்டை அணுக கட்சியினரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds