feddral bank
BREAKING NEWS

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு

பதிவு செய்த நாள்: 30 Sep 2016 12:28 pm

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று (வெள்ளிக்கிழமை) மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மந்திரிசபை கூட்டத்தில், காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றது, நியூயார்க்கில் இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. விவாதத்துக்கு முன்னதாக வெளியுறவு செயலாளர் இதுபற்றி விளக்குவார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*