[email protected]
feddral bank
BREAKING NEWS

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து 25 நாடுகளின் தூதர்களுக்கு இந்தியா விளக்கம்

பதிவு செய்த நாள்: 30 Sep 2016 11:20 am
By :

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை ஒழிப்பதற்கு ராணுவ நடவடிக்கை எடுத்ததின் பின்னணி குறித்து அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் உள்பட 25 நாடுகளின் தூதர்களை மத்திய அரசின் சார்பில் அதன் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் நேற்று டெல்லி சவுத் பிளாக் அலுவலகத்திற்கு அழைத்து விளக்கினார்.

அப்போது அவர், அவர்களிடம் “பாகிஸ்தானில் நாங்கள் மேற்கொண்டது தரமான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைதான். காஷ்மீர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நடத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகளை கொல்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என கூறினார்.

மேலும், “தற்போதைய நிலவரப்படி, அங்கு இனி தாக்குதல் நடத்தும் உத்தேசம் இல்லை. அதே நேரத்தில் பயங்கரவாதிகள் இங்கு தாக்குதல் நடத்துவதற்கு பாதுகாப்பு படைகள் அனுமதிக்காது” எனவும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் உறுதி செய்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*