[email protected]
feddral bank
BREAKING NEWS

காவேரி விவகாரம்:மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி பேட்டி

பதிவு செய்த நாள்: 30 Sep 2016 11:33 am

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நேற்று மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி தமிழக, கர்நாடக அரசுகளை அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், காவிரி பிரச்சினை தொடர்பாக நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்தார். “இந்தியாவின் எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இனி வன்முறை சம்பவங்கள் நடைபெற்றால் நான் கண்டிப்பாக இரு மாநிலங்களின் எல்லையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வேன்” என்று அப்போது அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*