feddral bank
BREAKING NEWS

உள்ளாட்சி தேர்தல்:பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு

பதிவு செய்த நாள்: 29 Sep 2016 9:58 am

தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது.

இந்த தேர்தலில் அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 36 வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் 60 வார்டுகளை கொண்ட ஈரோடு மாநகராட்சியில் 25 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி தேர்தலில் 5 வார்டுகளுக்கான வேட்பாளர்களும், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 5 வார்டுகளுக்கான வேட்பாளர்களும், தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் 4 வார்டுகளுக்கான வேட்பாளர்களும், மூஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் 3 வார்டுகளுக்கான வேட்பாளர்களும், நாகர்கோவில் நகராட்சியில் 19 வார்டுகளுக்கான வேட்பாளர்களும், தெங்கம்புதூர் பேரூராட்சியில் 10 வார்டுகளுக்கும், புத்தளம் பேரூராட்சியில் 8 வார்டுகளுக்கும், கணபதிபுரம் பேரூராட்சியில் 7 வார்டுகளுக்கான வேட்பாளர்களும் மற்றும் 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds