feddral bank
BREAKING NEWS

உள்ளாட்சி தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்: 27 Sep 2016 10:29 am
By :

உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 91 ஆயிரத்து 98 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதில், ஊரக பகுதிகளில் 62 ஆயிரத்து 337 வாக்குச்சாவடி மையங்களும், நகர்புறங்களில் 28 ஆயிரத்து 761 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் 5 ஆயிரத்து 531 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஊரக பகுதிகளில் ஓட்டுப்பெட்டிகள் மூலம், நகர்புற பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடக்கிறது.

அதன்படி, சென்னை உள்பட நகர்புற பகுதிகளில் 34 ஆயிரத்து 515 மின்னணு கட்டுப்பாடு கருவிகளும், 41 ஆயிரத்து 418 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 75 ஆயிரத்து 933 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு மாநகராட்சி பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கு அந்த எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக அந்த எந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.

சட்டமன்ற தேர்தலின் போது வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் அழிக்கப்படுகின்றன. புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட வேட்பாளர் பட்டியலும் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஒரு சில தினங்களில் முடிவடைந்துவிடும். அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீண்டும் சீல் வைக்கப்படும். அதைத்தொடர்ந்து குழுக்கள் முறையில்(ரேண்டம்) மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த மண்டலங்களுக்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds