[email protected]
feddral bank
BREAKING NEWS

வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தை தெரிவிக்காததால் குழம்பிய வேட்பாளர்கள்

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 5:00 pm
By :

உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அக்டோ பர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதாக மாநில தேர்தல் கமி‌ஷன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் எங்கே வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவிக்காததால் போட்டியிட விரும்புவோர் பெரும் குழப்பத்தில் உள்ளனர். எனவே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மனுதாக்கல் செய்யும் இடங்களை விரைவில் அறிவிக்க வேண்டும் என தேர்தலில் போட்டியிடுவோர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருவள்ளூர் நகராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் ராஜ்குமார் கூறும்போது, நேற்றே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் முதல் நாளே வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று இருந்தேன்.

வேட்பு மனுதாக்கல் செய்யும் இடத்தை அதிகாரிகள் அறிவிக்காததால் குழப்பமாக உள்ளது. கடந்த முறை தேர்தல் தேதி அறிவித்த உடனே அதிகாரிகள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்தை தெரிவித்தனர் என்றார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*