[email protected]
feddral bank
BREAKING NEWS

வீண்பேச்சாக மாறிய பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதி-காங்கிரஸ் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 10:26 am
By :

பயங்கரவாதத்தை கையாளும் விதத்தில் பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டிய மத்திய அரசு, அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்த சம்பவத்துக்குப்பின் நேற்றுமுன்தினம் கோழிக்கோட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உரி தாக்குதலை இந்தியா மறக்காது எனவும், வீரமரணம் அடைந்த 18 வீரர்களின் தியாகம் வீண் போகாது எனவும் பாகிஸ்தானை எச்சரித்தார்.

ஆனால் பயங்கரவாதத்தை கையாளும் விதத்தில் பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என தேர்தலின் போது அளிக்கப்பட்ட பிரதமரின் வாக்குறுதி, தற்போது வீண்பேச்சாக மாறியிருப்பதாக கூறியுள்ளது.

இது குறித்து கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘உரி தாக்குதல் போன்ற சம்பவங்களை தடுக்கவும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் மோடி தனது உரையில் எதுவும் கூற தவறிவிட்டார். அவரது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் பேச்சுதான்’ என்று தெரிவித்துள்ளார்.

இதைப்போல காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் தனது ‘டுவிட்டர்’ தளத்தில், ‘மோடியின் உரையால் அவரது ஆதரவாளர்கள் கூட ஏமாற்றம் அடைந்துள்ளனர். மோடி விதைத்தார், மன்மோகன் அறுவடை செய்தார் என்றே வலைத்தள பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மோடி தனது வார்த்தை ஏவுகணைகள் மூலம்தான் பாகிஸ்தானை அழித்து விட்டார்’ என்று கிண்டலாக கூறியுள்ளார்.

மற்றொரு தலைவரான மணிஷ் திவாரி, மோடி அரசின் வெளியுறவுக்கொள்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘ரஷிய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தை சீனா அமைத்து வருகிறது. அதில் இணைவதற்கு ஈரான் விருப்பம் தெரிவித்து உள்ளது. மோடி எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds