feddral bank
BREAKING NEWS

லோதா கமிட்டி குறித்து முன்னாள் கேப்டன்கள் கருத்து

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 2:50 pm
By :

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அக்டோபர் 15-ந்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

மாநில சங்கத்தில் இருப்பவர்கள் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தில் இடம் பெறக் கூடாது, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக செயல்படக் கூடாது. ஒரு மாதத்துக்கு ஒரு ஒட்டு, மந்திரிகள், அரசு அதிகாரிகள் நிர்வாக பொறுப்பில் இருக்க கூடாது போன்ற பரிந்துரைகள் முக்கியமானது.

இதனால் இந்த பரிந்துரைக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனவே லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவதில் பி.சி.சி.ஐ. தயக்கம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் லோதா கமிட்டியின் பரிந்துரைகள் மிகவும் கடுமையானது என்று முன்னாள் பிரபல கேப்டன்கள் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். கவாஸ்கர் இதுகுறித்து கூறியதாவது:-

லோதா கமிட்டியில் இடம் பெற்ற 3 பேரை நான் மிகவும் மதிக்கிறேன். சில பரிந்துரைகள் மிகவும் கடினமானது. ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு என்ற பரிந்துரை சங்கங்களுக்கு கடினமானது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அது மாதிரியான நிலை இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்னை கடந்த முதல் இந்திய வீரர் கவாஸ்கர் ஆவார்.

லோதா கமிட்டியின் பெரும்பாலான பரிந்துரைகள் நியாயமானவை. சில பரிந்துரைகள் இப்போதும் கடினமானதே ஒரு மாநிலத்தில் ஒரு ஓட்டு என்பது கடினமான பரிந்துரையாகும். தேர்வு குழுனரின் பதவி காலம் குறைந்த பட்சம் 5 ஆண்டுகளாவது இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds