[email protected]
feddral bank
BREAKING NEWS

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 11:22 am
By :

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளில் இந்த அச்சுறுத்தல் மிகவும் பலமாக உள்ளது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை போக்கவும், ஒரு வேளை தீவிரவாதிகள் தாக்கினால் அதை எதிர்கொள்ளவும் போலீசாருக்கு உரிய பயிற்சி கொடுக்கும் வகையில், மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

வருகிற 28-ந் தேதி(நாளை மறுநாள்) மற்றும் 29-ந் தேதிகளில் சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்த உள்ளனர்.

‘சாகர் காவச்’ என்று இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘சாகர் காவச்’ என்பது இந்தி எழுத்தாகும். தமிழில் இதற்கு, ‘கடல் கவசம்’ என்று பெயர். கடல் எல்லை பகுதி ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும், என்பதற்காக இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது என்றும், அதனால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*