feddral bank
BREAKING NEWS

நைஜீரியா, மாலி ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 11:30 am

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி 5 நாள் பயணமாக நைஜீரியா, மாலி ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்கிறார். அதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) நைஜீரியா புறப்படுகிறார்.

ஹமீது அன்சாரியுடன் அவரது மனைவி சல்மா அன்சாரி, நிதித்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், எம்.பி.க்கள் 4 பேர் மற்றும் உயர் அதிகாரிகளும் செல்கின்றனர்.

நைஜீரியாவின் துணை அதிபர் யெமி ஓசின்பஜோவின் அழைப்பை ஏற்று முதல் முறையாக அந்நாட்டுக்கு செல்லும் ஹமீது அன்சாரி தலைநகர் அபுஜாவில் அதிபர் முகமது புகாரி, துணை அதிபர் யெமி ஓசின்பஜோ உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கு உள்ள ராணுவ கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றுகிறார். அதனை தொடர்ந்து அபுஜாவில் இந்திய தூதரக கட்டித்தை திறந்துவைக்கிறார்.

நைஜீரியாவில் 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு 29-ந் தேதி மாலி நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இந்தியாவின் உயர் மட்டத்தலைவர் ஒருவர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

அங்கு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசும் ஹமீது அன்சாரி அந்நாட்டின் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*