[email protected]
feddral bank
BREAKING NEWS

தீவிரவாதிகளை வேட்டையாடும் ராணுவ வீரர்களுக்கு பெரிய அளவிலான ஊக்கத் தொகை- மத்திய அரசு

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 12:34 pm
By :

தீவிரவாதிகளை வேட்டையாடும் ராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்கு போதிய விடுமுறை, ஓய்வு இல்லாததால் அவர்கள் பல்வேறு மன கஷ்டங்களுக்கு ஆளாகி அவர்களுக்கு ஒருவித மன இறுக்கம் ஏற்படுவதாக கூறப்பட்டது.

இதையடுத்து இந்த புதிய திட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றாலோ, அல்லது முக்கியமான ஊடுருவலை தடுத்தாலோ, தீவிரவாதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினாலோ அதில் சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்களுக்கு பெரிய அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படும்.

எந்த மாதிரி ஊக்கத் தொகை வழங்குவது என்பது பற்றி தற்போது துறை ரீதியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இது அமுலுக்கு வர உள்ளது.

ஏற்கனவே சிறப்பாக செயல்படும் ராணுவ வீரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. ஆனால் இது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தால் மட்டும் அவ்வப்போது பரிசு வழங்கப்படும். அதுவும் மிகவும் குறைந்த மதிப்புள்ள பரிசுகளே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இனி வழங்கப்படும் பரிசு அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில் வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சாதனை செய்த உடனேயே அவருக்கு பரிசு வழங்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் மிக விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இதனால் தீவிரவாதிகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds