[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழக காங்கிரஸில் இளங்கோவனால் நீக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மீண்டும் நியமனம்

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 4:07 pm
By :

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சில மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். அந்த பொறுப்பாளர்கள் டெல்லி தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல.

எனவே அகில இந்திய தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரது அறிவுரையின்படி நீக்கப்பட்ட மாவட்ட தலைவர்களை மீண்டும் அந்தந்த மாவட்ட தலைவர்களாக நியமிக்கவும், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை அதில் இருந்து விடுவிக்கிறோம்.

திருவள்ளூர் தெற்கு, திருப்பூர் புறநகர், நாகப்பட்டினம் வடக்கு, நெல்லை மேற்கு, நெல்லை நகரம், கன்னியாகுமரி கிழக்கு ஆகிய மாவட்டங்களின் தலைவர்கள் மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்கள்.

வடசென்னை மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரை மீண்டும் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கிறோம். முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அவரது நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவர் மீண்டும் சேர்க்கப்பட்டு வகித்த பதவிகள் மீண்டும் வழங்கப்படுகிறது.

மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக கார்த்திகேயன் நியமிக்கப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட புதிய பொறுப்பாளராக ஜேசு துரைராஜா நியமிக்கப்படுகிறார்.

ஒவ்வொரு மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறுவதற்கு 61 மாவட்டங்களுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் மனுக்களையும் வாங்குவார்கள். அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க.வுடன் பேசி முடிவு செய்வார்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சி எல்லா வகையிலான பலத்தோடும் தயாராக உள்ளது.

மற்ற கட்சிகளுக்கு உரிய அவகாசம் கொடுக்காமல் அவசர அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் பெறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் பணம் விளையாடியது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. சட்டசபை தேர்தலில் இருந்த கூட்டணி கட்சிகளே இப்போதும் நீடிக்கின்றன. புதிதாக கட்சிகள் இடம் பெறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏற்கனவே நீக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எனக்கு தெரியாது.

மாநில தலைவருக்கு எந்தெந்த பதவிகளில் பொறுப்பாளர்களை நியமிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. ஏற்கனவே நீக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் நீக்கத்தை அகில இந்திய தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை.

சட்டசபை தேர்தலில் அந்த தலைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அந்த தகவலை என்னிடம் தெரிவிக்கலாம்.

பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது கண்டிக்கத்தக்கது. இது மோசமான கலாச்சாரம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*