feddral bank
BREAKING NEWS

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 10:43 am

கொடைக்கானலில் சில நாட்களாக பகல் பொழுதில் வெயிலின் தாக்கமும் மாலை மற்றும் இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் சுற்றுலா இடங்களில் ரம்யமான நிலை காணப்படுகிறது. இதனிடையே தொடர் விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளது.

விடுமுறையில் தங்கள் குழந்தைகளுடன் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்தி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் முன்னே செல்ல முடியாமலும், பின்னால் எடுக்க முடியாமலும் திணறியதோடு நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே நகராட்சி நிர்வாகம் கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கி தருவதோடு இதனை கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல ஆன்மீக தலமான பழனியிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds