[email protected]
feddral bank
BREAKING NEWS

காஷ்மீரில் பயங்கரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மீது தீவிரவாதிகள் தாக்குதல்

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 6:04 pm

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் வான்போக் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை குறிவைத்து தீவிரவாதிகள் இன்று கையெறி குண்டை வீசி தாக்கினர். கையெறி குண்டு வெடித்ததில் 3 பாதுகாப்பு படை போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாட அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds