[email protected]
feddral bank
BREAKING NEWS

உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி மீது ஷூ வீச்சு

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 6:28 pm
By :

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்கும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தீவிர பணியாற்றி வருகிறது. கட்சி நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் துணைத்தலைவர் ராகுல் காந்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவ்வகையில் ராகுல் காந்தி இன்று சீதாப்பூரில் ரோட்ஷோ நடத்தினார். அவர் பொதுமக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி ஒரு வாலிபர் தனது ஷூவை வீசி எறிந்தார். ஆனால் அந்த ஷூ அவர் மீது விழவில்லை. ஷூ வீசியவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஹரிஓம் ஷர்மா என்பதும், அவர் அரசியல் பின்னணி எதுவும் இல்லாதவர் என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல்காந்தியின் இந்த ரோட்ஷாவால் எந்த பயனும் இல்லை என அந்த நபர் கூறியதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார். ராகுல்மீது ஷூ வீசப்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds