feddral bank
BREAKING NEWS

அகிலேஷ் யாதவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மந்திரி மீண்டும் சேர்ப்பு

பதிவு செய்த நாள்: 26 Sep 2016 3:34 pm
By :

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சுரங்க ஒதுக்கீடு மற்றும் கனிமவளங்களை வெட்டி எடுப்பதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், இதில் அரசு உயரதிகாரிகள் மற்றும் மிக முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாநிலம் முழுவதும் நடந்ததாக கூறப்படும் சுரங்க முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, 6 வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்த மாநில அரசின் மனு கடந்த 9-ம் தேதி தள்ளுபடியானது

இந்நிலையில், இந்த சுரங்க முறைகேட்டில் மாநில சுரங்கத்துறை மந்திரி காயத்ரி பிரஜாபதிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வந்த செய்திகளையடுத்து, கடந்த 12-ம் தேதி காயத்ரி பிரஜாபதியை மந்திரி பதவியில் இருந்து நீக்கம் செய்து முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.

இதேபோல், அம்மாநில பஞ்சாயத்துராஜ், சிறுபாசனம் மற்றும் கால்நடைத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்துவந்த ராஜ் கிஷோர் சிங் என்பவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் காயத்ரி பிரஜாபதியை மந்திரி பதவியில் இருந்து நீக்கியுள்ளது, அகிலேஷ் யாதவின் கண்துடைப்பு அரசியல் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுரங்கத்துறை மந்திரி காயத்ரி பிரசாத் பிரஜாபதி இன்று மீண்டும் அம்மாநில மந்திரிசபையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் கட்சிக்குள் மோதல்போக்கு மற்றும் கோஷ்டிப் பூசலை தவிர்க்கும் வகையில் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் செய்துவைத்த சமரசத்தை அடுத்து காயத்ரி பிரசாத் பிரஜாபதி இன்று மீண்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

அவருக்கு ஒதுக்கப்பட்ட இலாகா எது? என்பது தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds