[email protected]
feddral bank
BREAKING NEWS

திருவனந்தபுரத்தில் பாகிஸ்தான் கோடியை எரித்த சிவசேனா தொண்டர்கள்

பதிவு செய்த நாள்: 24 Sep 2016 2:17 pm
By :

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ தலைமையகத்தின் மீது கடந்த 18-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீதான எதிர்ப்புணர்வு இந்தியர்களிடையே மேலோங்கி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் நடைபெற்றுவரும் பா.ஜ.க. தேசிய செயற்குழுவில் இன்றுமாலை கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் காரசாரமாக உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இன்று சிவசேனா தொண்டர்கள் பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக சிவசேனா தொண்டர்கள் குறிப்பிட்டனர்.

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் விளையாட்டு உள்ளிட்ட அனைத்துவகை தூதரக உறவுகளையும் முறித்துக்கொள்ள வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வருதற்கு செவிசாய்க்காமல் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி சென்றுவந்த பின்னர் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதாக தெரிவித்த கேரள மாநில சிவசேனா தலைவர் புவனா சந்திரன், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கொடியை எரித்து போராட்டம் நடத்திவருவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*