[email protected]
feddral bank
BREAKING NEWS

கருப்புப் பண விவரத்தை தர வேண்டும்: சுவிஸ் அரசுக்கு ப.சிதம்பரம் கடிதம்

பதிவு செய்த நாள்: 03 May 2014 10:01 am
By :

pchidambaram[1]இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தர மறுக்கும் சுவிட்சர்லாந்து அரசுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஹெச்எஸ்பிசி கிளைகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரத்தை தருவதில் ஒத்துழைக்க மறுப்பது, இருதரப்பு உறவை பாதிக்கக்கூடியது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களில் மூன்றாவது முறையாக சுவிட்சர்லாந்து நிதி அமைச்சர் எவலின் விட்மெருக்கு சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளதாக நிதி அமைச்ச உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேரடி வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்கீழ் சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரத்தை அளிப்பது அந்நாட்டின் கடமை என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் 26 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அதுபற்றிய விவரமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*