[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழ்நாட்டில் கடல்வளம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை- நரேந்திர மோடி பேட்டி

பதிவு செய்த நாள்: 18 Apr 2014 11:34 am
By :

modiபாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு கடல் வளத்தை சரியாக பயன்படுத்தவில்லை என குற்றம்சாற்றியுள்ளார்

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது :

தமிழ்நாடு மிக அதிக அளவு சுற்றுலா பகுதிகள் நிறைந்த பகுதி. இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா வளர்ச்சி அடைவதன் மூலம் பெரிய தொழில் அதிபர்களுக்கு லாபம் இல்லை. ஆனால் இதன் மூலம் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல் வளம் நிறைந்த மாநிலம் ஆகும். குஜராத்தில் கடற்கரை மற்றும் கடல் வளத்தை முழுவதும் பயன்படுத்தி வருவதால் அங்கு நல்ல வளர்ச்சி உள்ளது.  . தமிழ்நாடு கடல் வளத்தை சரியாக பயன்படுத்தவில்லை . தமிழகம் கடல் வளத்தை முழுமையாக பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி பெறுவதுடன் வேலைவாய்ப்பும் பெருகும் . தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை மேம்படுத்தவும், புதிதாக துறைமுகங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றும் கூறினார்

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*