feddral bank
BREAKING NEWS

காவல்துறையை நவீனப்படுத்த 130.85 கோடி

பதிவு செய்த நாள்: 13 Feb 2014 3:30 pm
By :

தமிக சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டதொடர் நடக்கிறது. இதில் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நீதிமன்றங்களுக்கு ரூ.783.02 கோடி நிதி ஒதுக்கப்படும்,

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையை நவீனப்படுத்த ரூ.189.65 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார் மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புதியதாக 62 காப்பகங்களை கட்டுவதற்கும், ஏற்கனவே உள்ள 45 காப்பகங்களை பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை மேம்பாட்டிற்காக 5,186 கோடி ரூபாயும், காவல்நிலையங்கள், குடியிருப்புக்கள் கட்ட 571 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறையை நவீனப்படுத்த 130.85 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடப்பு நிதியாண்டில், ரூ.681 கோடி நிதியும் தமிழ் வளர்ச்சிக்கென ரூபாய் 39.29 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வரிவசூல் செய்ய 10 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்படும், தமிழகம் முழுவதும் ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்  என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் வெளியாகியுள்ள மேலும் சில அறிவிப்புகள் :-நடப்பு நிதியாண்டில் கோழி வளர்ப்புக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூவம் நதியை முழுமையாக சீரமைக்க ரூ.3833.62 கோடியில் புதுத்திட்டம் உருவாக்கப்படும்.
5 ஆண்டுக்குள் முடிக்கப்படும் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்த்தம் செய்ய ரூ. 2.077 கோடி ஒதுக்கப்படும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கரில் விரிவுப்படுத்தப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds