[email protected]
feddral bank
BREAKING NEWS

சுந்தரம் IAS, தயாதேவதாஸ் சதி திட்டம் (வீடியோ காட்சிகள் )

தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தாதுமணல் ஆலையை தொழில் போட்டியினால், ஒரு தனிப்பட்ட நபரின் சுயலாபத்துக்காக, தாது மணல் கொள்ளையடிக்கப்படுகிறது என பொய் பிரசாரம் செய்யப்பட்டு தாது மணல் தொழிலை முடக்க முயற்சி நடைபெருவதாககூறி வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பேசினார் தாது மணல் அள்ளும் நிறுவனங்களின் சங்க ஒருங்கிணைப்பாளர் பால் ராஜா

பொய்ப் பிரசாரம் செய்து வரும் அந்த நபரின் தொழிற்சாலைகள் 2 ஆண்டுகளாக மூடப்பட்டு வருகின்றன என்ற காரணத்தால் தாதுமணல் கொள்ளை என்ற பிரசாரம் செய்து இந்த தொழிலை முடக்கும் சதித்திட்டத்தை அவர் தீட்டியுள்ளார்.

இதற்கான முழு வீடியோ ஆதாரங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் இந்த முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தாதுமணல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் துணைப் போயுள்ளனர்.

அந்த நபர், மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள ரத்னகிரியில் தாது மணல் தொழிலுக்காக சுரங்க உரிமங்களைக் குத்தகை எடுத்துள்ளார்.

தனது தொழிலை வளர்க்கும் நோக்கில் தமிழகத்தில் தாது மணல் தொழிலை முடக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் உள்ள சதித்திட்டங்களை தெரிந்துகொண்டு, தாற்காலிகமாக மூடப்பட்டுள்ள தாதுமணல் சுரங்கத்தொழிலை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்

Tamil Version:

English Version :

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds