[email protected]
feddral bank
BREAKING NEWS

வீட்டுவரி பெயர் மாற்ற லஞ்சம்: மாநகராட்சி ஊழியர் கைது

பதிவு செய்த நாள்: 03 Jan 2014 5:58 pm
By :

lanchamவீட்டு வரி பெயர் மாற்ற ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக ஈரோடு மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 ஈரோடு மாநகராட்சியின் 1-வது மண்டல அலுவலகம் வீரப்பன்சத்திரத்தில் உள்ளது. இங்கு பில் கலெக்டராக பணியாற்றி வந்தவர் ஜெயகாந்தன் (35). கருங்கல்பாளையம் திருநகர்காலனியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டு வரி மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவற்றின் பெயரை தனது பெயரில் மாற்றம் செய்ய இந்த அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். பெயர் மாற்றம் செய்ய ரூ.9,000 லஞ்சம் தர வேண்டும் என்று பில்கலெக்டர் ஜெயகாந்தன் கூறினாராம்.

அவ்வளவு பெரிய தொகை தன்னால் தர இயலாது என முருகேசன் கூறியதால், ரூ.5,000 தரும்படி ஜெயகாந்தன் கூறினாராம். இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவில் முருகேசன் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்த ஆலோசனைபடி, ஈரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜெயகாந்தனிடம், முருகேசன் ரூ.5,000-யை வெள்ளிக்கிழமை கொடுக்கும்போது ஜெயகாந்தனை போலீஸார் கைதுசெய்தனர்.

பின்னர் அவரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மண்டல அலுவலகத்துக்குச் சென்ற போலீஸார், அங்கு தனி அறையில் வைத்து 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம், ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*