feddral bank
BREAKING NEWS

யார் இந்த அண்ணாச்சி வைகுண்டராஜன் ? அதிர்ச்சி தகவல்கள்

[metaslider id=47414]

வைகுண்டராஜன் @ Vaikundarajan

அண்ணாச்சி வைகுண்டராஜன்

வைகுண்டராஜன் பற்றி நமது நிருபர்கள் கண்டறிய சென்றபோது மக்கள் கூறிய விவரம் :
தென்  மாவட்டங்களில் அண்ணாச்சி  வைகுண்டராஜன் கதையை கேட்டவர்களிடம் கிடைத்த தகவல் பகீர் ரகமாக இருந்தது. வைகுண்டராஜன் இந்த பெயரை தென் தமிழ் நாட்டில் இருக்கும் யாரை கேட்டாலும் அட! நம்ம அண்ணாச்சி  வைகுண்டரஜன்னப்பா ! என்று சற்றும் யோசிக்காமல் வி வி மினரல்ஸ் வைகுண்டராஜன் பற்றி பளிச்சென்று சொல்லிவிடுவார்கள், அந்த அளவுக்கு இந்த பெயர் தென் மாவட்டங்களில் மிகப்பிரபலம்
காலில் செருப்புகூட போடாத எளிமையான தோற்ற்றம் உடைகளில் எந்த ஆடம்பரமும் இல்லை சாதாரண வேஷ்டி சட்டை, பலநூறு கோடிக்கு அதிபதியா இவர்? என  ஆச்சரியப்படவைக்கும் தோற்றம்   . அண்ணாச்சி வைகுண்டராஜன் வைகுண்ட ராஜன்  BUC  வரை மட்டும் படித்தவர் இன்று தன் தொழில் திறமை மற்றும் அயராது உழைப்பால் உலக நாடுகளில் கார்னட் எனும் கனிம தொழிலில் இந்தியாவை  முதலிடத்திற்கு உயர்த்தி தலை நிமிர செய்தவர் .
கடந்த ஆட்சியில் பிரபல டிவியின் பங்குகளை வாங்கினார் என்ற ஒரே காரனத்திற்காக அதனை கட்டாயபடுத்தி எழுதி வாங்க முன்னால் மத்திய அமைச்சர் போராடினார் .  கடந்த ஆட்சியில் அண்ணாச்சி வைகுண்டராஜன் மீது 12 FIR பதியப்பட்டு பின்பு அந்த ஆட்சியிலேயே பொய் வழக்கு என முடிக்கப்பட்டது தனி கதை . சட்ட நுணுக்கங்களை தன் விரல் நுனியில் வைத்திருந்த காரணத்தால்  சட்டத்தை மீறாதவர்.

Vaikundarajan With his friend Rajan

அண்ணாச்சி வைகுண்டராஜன் நண்பருடன்

அண்ணாச்சி வைகுண்டராஜன் நாடார் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வளந்துள்ளார் . அண்ணாச்சி வைகுண்டராஜன்  இவ்வளவு  செல்வாக்கோடு தன் தொழிலை  வளர்ச்சி அடையச் செய்வதற்கு தன்  போட்டியாளர்களை ” கை ” காட்டுகிறார் , தன் தொழில் போட்டியாளர்களின் பொறாமை குணத்தினாலும் தன்னுடைய சொந்த முயற்சியினாலும் உழைப்பாலும்  சிறிது சிறிதாக கஷ்ட பட்டு இன்று உலகம் போற்றும் நம்பர் 1 தொழிலாக மாற்றி சாதனை படைத்துள்ளார்  .
award

  இன்று தன்னுடைய நிறுவனத்தில் சுமார் 18500 ஊழியர்களை  வேலைக்கு அமர்த்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களின் ஒளிவிளக்காக திகழ்கிறார்  என்பது நிதர்சனமான உண்மை . இந்த சமயத்தில் முன்னால் மத்திய அமைச்சர் தனது பதவி பலத்தை அரசியல் பலத்தை பண பலத்தை கார்னட் தொழிலில்  புகுத்தி தனது பள்ளி தோழரான தயோதேவதாஸ் என்பவரை “முதலாளியாக்கி” தொழில் எதிரியான அண்ணாச்சி வைகுண்டராஜன் புகழை கெடுக்க ஆரம்பித்தார் .

வைகுண்டராஜன் @ Vaikundarajan
அண்ணாச்சி வைகுண்டராஜன் புகழை கெடுக்கும் விதமாக தன் நிறுவனத்தில்   முன்னால் IAS அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட புகார்களை மத்திய மாநில அரசுக்கு எழுதி தள்ளினார்கள் . மத்திய மாநில அரசுகள் பலகட்ட ஆய்வுகள் செய்து தவறுகள் இல்லை என்றும் இந்நிறுவனம் ஒரு ஏற்றுமதி நிறுவனம் எனவே அனுமதி இன்றி ஏற்றுமதி செய்ய முடியாது  . எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை என்பதனை 8-5-2013  அன்று மத்திய அரசுக்கு அறிக்கை செய்தனர்  மேலும் அரசுக்கு அந்நியசெலாவணியை அதிக அளவு ஈட்டி தந்துள்ளது  vv mineral நிறுவனம் என்பது நிருபணம் ஆகிறது என்றும் அறிக்கை செய்துள்ளனர் .

அண்ணாச்சி  வைகுண்டராஜன்
இதனால் அதிர்ச்சி அடைந்த முன்னால் மத்திய அமைச்சர் தனது மீடியா நண்பர்களை விலைக்கு வாங்கி அபாண்டமாக ஒரு தொழில் நிறுவனத்தை அழிக்க பொய் செய்திகளை விலைகொடுத்து பரப்ப செய்தனர் மேலும் செப்டம்பர்  11  அன்று நடக்கவிருந்த தனது மகன் திருமணத்தினை ஆகஸ்ட் மாதமே  நடந்ததாக பொய் செய்திகளை பரப்பி அதில் ஆய்வு குழுவினர் கலந்து கொண்டனர்  என்று பொய்யான செய்திகளை வெளியிட வைத்தனர் மேலும் ஆய்வுகள் முடிவு தெரிவதற்கு முன்பே தாது கொள்ளை என்று வெளியிட வைத்தார்கள் , தாது மணல் குத்தகை பெறுவதற்கு  கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை அனுமதி பெற வேண்டும் என்று ஒரு சிறு அறிவு கூட  இல்லாத அறிவு ஜீவிகள் தாது மணல் கொள்ளை என்று வாய்விட்டு அழுகின்றனர் என்று விளக்கமாக கூறினார்கள்
ராதாபுரம் தாலுகாவில் எந்த கிராமத்திலாவது அரசு நிலத்தில் அனுமதி  இன்றி மணல் அள்ளினார்கள் என்பதை நிருபிக்க தயாரா ? என வினா எழுப்பினார்கள்

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*