[email protected]
feddral bank
BREAKING NEWS

தென்மாவட்ட வளர்ச்சியை முடக்கும் போராட்ட கும்பல்

பதிவு செய்த நாள்: 22 Oct 2013 10:05 am
By :

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வளர்ச்சி  திட்டத்துக்கு எதிராக ஒரு எதிர்ப்பு செய்தி வந்தவண்ணம் உள்ளது .இந்த  போராட்டகாரர்கள்  ஸ்டெர்லைட் , துறைமுகம் , தாதுமணல் ஆலை , கப்பல் கட்டுமான துறைமுகம் , கூடங்குளம் அணுமின் நிலையம் என அணைத்து வளர்ச்சி திட்டங்களை கன்மூடித்தனமான எதிர்ப்பது அவர்களின் போராட்டங்களில் இருந்து தெரிகிறது . உதாரணமாக துத்துக்குடி துறைமுகத்திற்கு அருகில் Rs. 7500கோடி செலவில் அறிவிக்கப்பட்ட கப்பல் கட்டுமான துறைமுகத்திற்கு அறிவிப்பு வெளியான அதே நாளில் அதற்க்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால் இப்போது அவர்களின் கவனம் கனிம மணல் ஆலைகள் மீது மாறிவிட்டது

இதுகுறித்து  இந்திய தொழில் கூட்டமைப்பு ( சிஐஐ ) மற்றும் தூத்துக்குடி அத்தியாயம் தலைவர் சங்கர் மாரிமுத்து கூறியதாவது :  விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது நடைவடிக்கை  அரசு எடுக்கவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும்மில்லை . ஆனால்  அணைத்து ஆலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் . தவறு செய்யாத நிறுவனங்கள்   இயங்காமல் இருப்பதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது  அது மட்டும்மல்லாமல்  ஆலைகளில் பணிபுரிந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது . மேலும்  அந்நியச்செலாவணி இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்

ஒரு CPI-M தலைவர் கனிம மணல்களை எடுக்க கூடாது அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று தெரிவித்தார் . அப்போழுது நிலக்கரி , சுரங்க எண்ணெய் , இயற்கை எரிவாயு மற்றும்  இரும்பு தாது எடுப்பதையும் நிருத்தவேண்டுமா  ? என கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்தார்
திரு M.புஸ்ப ராயண்

நாங்கள் சுற்றுசுழலை பாதுகாக்கவே இந்த போராட்டங்களை மேற்கொள்ளுவதகவும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார் .நாங்கள் வேறு வளர்ச்சி திட்டங்கள் ஏதும் உங்களிடம் உண்டா என்று கேட்டதற்கு , மதிய மற்றும் மாநில அரசின் தவறுகளை சுட்டிகாட்டுவது தவிர வேற ஒன்றும் இல்லை என தெரிவித்தார்

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds