[email protected]
feddral bank
BREAKING NEWS

தமிழ் சமுதாய பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்: 21 Oct 2013 11:27 am
By :

தாது மணல் ஆலைகளையும் குவாரிகளையும் திறக்கக் கோரி தூத்துக்குடியில், தமிழ் சமுதாய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மைதானத்தில் நேற்று தமிழ் சமுதாய பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், 2 சமுதாய மக்களிடம் மோதல் ஏற்படும் வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாக கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்தும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் தாது மணல் குவாரிகள் மற்றும் ஆலைகளை திறக்க அரசை வற்புறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் சமுதாய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ஜெயபால் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், கூடுதல் பொதுச் செயலாளர் மாரித்தங்கம், பொருளாளர் குணசீலன், தூத்துக்குடி மாநகர தமிழ்நாடு சத்திரிய நாடார் சங்க தலைவர் லிங்கசெல்வன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு அமைப்புகள்

சத்திரிய மகாசபை தலைவர் ராஜகோபால், நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார், தமிழ்நாடு முதலியார் பேரமைப்பு தலைவர் பி.எஸ்.பாபு, தமிழ்நாடு பிராமணர் சங்க பொதுச் செயலாளர் சங்கரநாராயணன், மள்ளர் பாரத செயலாளர் சிவா.ஜெய்பிரகாஷ், தமிழ்நாடு தியாகிகழ் கழக தலைவர் தக்கலை சந்திரன்,

திருச்செந்தூர் நாடார் இளைஞர் சங்கம் காமராசு, காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் எஸ்.சுரேஷ், தமிழ்நாடு நாடார் மகாஜன சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ், அகில இந்திய கல்சூரி நாடார் மகாசபை செயலாளர் செல்வராஜ், பொதுச் செயலாளர் சதீஷ் மோகன், தூத்துக்குடி நாடார் சங்க தலைவர் பீட்டர் ஜெபராஜ், சென்னை புறநகர் நாடார் சங்கங்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் மின்னல் ஸ்டீபன் ஆகியோர் பேசினார்கள்.

திறக்க வற்புறுத்தல்

அப்போது அவர்கள், விஜயகாந்தை கண்டித்தும், தாது மணல் குவாரிகள் மற்றும் ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, கிழக்கு மாவட்ட தலைவர் டேவிட்ராஜ், செயலாளர் நெல்லை ஆனந்தன், நகர செயலாளர் நஞ்சன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*