feddral bank
BREAKING NEWS

தாது மணல் கொள்ளை மறைக்கப்படும் உண்மைகள்

பதிவு செய்த நாள்: 16 Oct 2013 5:41 pm
By :

தற்போது தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் தாதுமணல் விவகாரம் பற்றி அறிந்துகொள்ள நமது உண்மை கண்டறியும் குழுவை  திருநெல்வேலிக்கு அனுப்பினோம் . அவர்கள் மேற்கொண்ட ஆய்வில்  கிடைத்த சில அதிர்ச்சிகரமான செய்திகளை இங்கே தொகுத்து பதியப்பட்டுள்ளது

திருநெல்வேலி கடற்கரை கிராம மக்கள் தெருவித்த உண்மைகள் :

        திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில்  மொத்தம் 7 மீனவ கிராமங்கள் உள்ளன . நாங்கள் முதலில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் பொழுது பலர் எங்களிடம் வந்து பேசினார்கள் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர் . ஆனால் சிலர் அவர்கள் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டனர் . பலர் தங்கள் கருத்துகளை தாமாக முன்வந்து தெரிவித்தார்கள் . கருத்துகளை தெருவித்த மக்களின் சில கருத்துகள் இங்கே பதிந்துள்ளோம்

1375197_1422197634665870_1021083730_nஜெயந்தி , கூத்தங்குளி : ” எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் இந்த தாது மணல் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன . எங்கள் ஊரில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் அந்த நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர் . அந்த நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள் . எங்கள் ஊரில் சிலர் அந்த நிறுவனத்தை கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளனர் . ஆனால் அவர்கள் ஆதரவு தர மறுத்து நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளனர் . அதனால் கோபம்கொண்ட சிலர்   எங்கள் கிராம மக்களை வேளைக்கு செல்லகூடாது என மிரட்டினர் அதையும் மீறி மக்கள் வேளைக்கு சென்றனர் . அந்த நிறுவனங்களை தமிழக அரசு தற்காலிகமாக தடை செய்து ஆய்வு நடத்தி வருகிறது . இதனால் எங்கள் மக்கள் வேலையின்றி தவிகின்ற்றனர் . ஆய்வுகளை விரைவு படுத்தி . ஆலைகளை திறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிகொண்டிருகின்றோம்

   இதை போல் சிலர் அனுமதி இல்லாமல் இந்த நிறுவங்கள் இயங்குவதாக குற்றம்சாட்டினர் . இந்த குற்றசாட்டு பற்றி உண்மை அறியும் குழு தாது மணல் ஆலை சம்பந்தப்பட்ட அரசு  அதிகாரிகளை தொடர்புகொண்ட பொது கிடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

அரசு அதிகாரி கூறியது :

                    இந்த நிறுவனங்கள் அணைத்து அரசு துறைகளிலும் அனுமதி பெற்று இயங்கிவருகின்றன . அவைகளை தாது மணல் நிறுவனங்கள் ஏற்கனவே வெளிட்டுள்ளன

இந்திய அரசின் :

  • பிரதமர் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தி துறை
  • சுரங்க துறை
  • வனத்துறை
  • சுற்றுசூழல் துறை
  • கடலோர மேலாண்மை குழு அனுமதி
  • சுங்க துறை
  • மாசுகட்டுப்பாட்டு  வாரியம்

தமிழக அரசின் :

  • புவியல் மற்றும் சுரங்கத்துறை
  • தொ ழில்துறை
  • சுகதரதுறை
  • வருவாய்த்துறை
  • வனத்துறை
  • சுற்றுசூழல் துறை
  • பொதுபணி துறை
  • காவல்துறை
  • தீயனைப்புதுறை
  • போக்குவரத்துத்துறை
  • உள்துறை

ஆகிய துறைகளிலும் உரிய அனுமதி பெற்று தனது சொந்த பட்டா நிலங்களில் குவாரி செய்துவருகிறது என்ற போதிலும் தொழில் போட்டியின் காரணமாக பிரச்சனைகளை இந்த நிறுவனங்களை சந்தித்துவருவதாக அவர் தெரிவித்தார்

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

கருத்தை சொல்லுங்க

*

Like our official page to unlock the content
Or wait 60 seconds